2013-09-23 15:13:44

கற்றனைத்தூறும் ... எழுத்தாளர்களின் விடா முயற்சிகள்


கிப்பன்(Gibbon), ‘உரோம் பேரரசின் வீழ்ச்சி’ என்ற தனது நூலை எழுதுவதற்கு இருபது ஆண்டுகள் எடுத்தார்.
பிளேட்டோ, ‘குடியரசு’ என்ற தனது நூலின் முதல்வரியை ஒன்பது விதமாக எழுதி அதில் திருப்தி வந்தபின்னர் அதனை வடிவமைத்தார்.
எட்மண்ட் பர்க்(Edmund Burke), வாரன் ஹேஸ்டிங்க்ஸ் குறித்த தீர்மானத்தில் பாராளுமன்றத்தில் பேச எழுதிய முடிவுரையை 16 தடவைகள் எழுதிச் செதுக்கினார்.
ஜோசப் பட்லர் (Joseph Butler) தனது அனாலஜி(Analogy)யை இருபது முறைகள் எழுதினார்.
வெர்ஜில்(Virgil) தனது எனீட்(Aeneid) நூலை எழுத 12 ஆண்டுகள் செலவழித்தார். ஆனாலும் அதில் திருப்தி ஏற்படாததால் மரணப்படுக்கையிலிருந்து எழுந்து அதைத் தீக்கு இரையாக்க முனைந்தார்.
காஃப்கா(Kapka Kassabova) ‘விசாரணை’ உட்பட்ட தனது பிற நூல்களைப் பதிப்பிக்க வேண்டாமென எழுதிவைத்துவிட்டு இறந்துபோனார்.
எர்னஸ்ட் ஹெமிங்வே (Ernest Miller Hemingway) தனது ‘முதியவரும் கடலும்’(Oldman and the Sea) என்ற நூலை 202 தடவைகள் திரும்பத் திரும்ப எழுதினார்.
விட்மன் தனது ‘புல்லின் இதழ்கள்’ என்ற நூலை திரும்பத் திரும்ப எழுதி இறுதியாக இதுவே முடிவான வடிவம் என அறிவித்தார்.
டால்ஸ்டாய் தனது ‘போரும் அமைதியும்’ என்ற நூலை திரும்பத் திரும்ப எழுதினார்.

ஆதாரம் : வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்







All the contents on this site are copyrighted ©.