2013-09-12 16:17:20

தாய்லாந்து பிரதமர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சந்திப்பு


செப்.12,2013. செப்டம்பர் 12, இவ்வியாழன் காலை 11 மணியளவில், தாய்லாந்து பிரதமர் Yingluck Shinawatra அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தார்.
அரைமணி நேரம் நீடித்த இச்சந்திப்பின்போது, தாய்லாந்துக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவு குறித்தும், கல்வி, சமுதாய மேம்பாடு ஆகிய அம்சங்களில் இவ்விரு தரப்பினரும் எவ்வகையில் இன்னும் இணைந்து செயலாற்ற முடியும் என்பது குறித்தும் பேசப்பட்டது.
மனித உரிமை, பல்சமய உரையாடல், பன்முகக் கலாச்சாரப் புரிதல் ஆகிய எண்ணங்களின் அடிப்படையில் நாடுகளுக்கிடையே நிலவக்கூடிய அமைதி குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தபின், பிரதமர் Yingluck Shinawatra அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே அவர்களையும், பன்னாட்டு உறவுகளின் திருப்பீடச் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்களையும் சந்தித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.