2013-09-11 16:22:07

பாலஸ்தீன அரசுத் தலைவர் பேராயர் நிக்கோல்ஸ் அவர்களுடன் சந்திப்பு


செப்.11,2013. புனித பூமியின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் கத்தோலிக்கத் திருஅவை எப்போதும் ஆர்வம் கொண்டுள்ளது என்று இங்கிலாந்து பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள் கூறினார்.
பாலஸ்தீன நாட்டின் அரசுத் தலைவர் Mahmoud Abbas அவர்கள், பிரித்தானியாவில் மேற்கொண்டுள்ள பயணத்தின்போது, இச்செவ்வாயன்று பேராயர் நிக்கோல்ஸ் அவர்களைச் சந்தித்தார்.
கத்தோலிக்கத் திருஅவையும், குறிப்பாக இங்கிலாந்து தலத்திருஅவையும் புனித பூமியின் நலனில் காட்டிவரும் அக்கறையைக் குறித்து பேராயர் நிக்கோல்ஸ் இச்சந்திப்பின்போது எடுத்துரைத்தார்.
இஸ்ரேல் அரசு தற்போது கட்டிவரும் பாதுகாப்பு அரண் என்ற திட்டம், கிறிஸ்தவர்களின் குடியிருப்புக்களையும், பல கிறிஸ்துவ நிறுவனங்களின் நிலங்களையும் விழுங்கிவருகிறது என்ற கவலை இச்சந்திப்பின்போது வெளியிடப்பட்டது.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.