2013-09-11 16:22:45

"நாங்கள் விரும்பும் உலகம்: பத்து இலட்சம் குரல்கள்" - ஐ.நா. அறிக்கை


செப்.11,2013. உலகில் நிலவும் கொடுமையான வறுமையைப் போக்குதல், அனைவரும் சமத்துவம், நீதி, அமைதி ஆகிய வழிகளில் வாழ்தல் ஆகியவை 2015ம் ஆண்டுக்குள் நாம் நிறைவேற்றக்கூடிய மில்லேன்னிய இலக்குகள் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
"நாங்கள் விரும்பும் உலகம்: பத்து இலட்சம் குரல்கள்" என்ற தலைப்பில் 88 நாடுகளில் மக்களிடமிருந்து திரட்டப்பட்டுள்ள கருத்துக்கள் அடங்கிய ஓர் அறிக்கையை இச்செவ்வாயன்று ஐ.நா.வின் தலைமை அலுவலகத்தில் வெளியிட்ட பான் கி மூன் அவர்கள் இவ்வாறு கூறினார்.
‘மில்லேன்னிய இலக்குகள் 2015’ என்ற திட்டத்தை நோக்கி உலகின் ஒவ்வொரு நாடும் முயற்சிகள் மேற்கொண்டுவரும் இவ்வேளையில், சமுதாயத்தில் குரல் எழுப்ப திறனற்ற வறியோரிடமிருந்து திரட்டப்பட்ட கருத்துக்கள், நமது மில்லேன்னிய இலக்குகளை மறு பரிசீலனை செய்ய உதவும் என்று பான் கி மூன் இத்திட்டத்தைப் பற்றி எடுத்துரைத்தார்.
கேட்கப்பட முடியாத மக்களின் குரல்களைக் கேட்பது அரசுகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று ஐ.நா. முன்னேற்றத் திட்டக் குழுவின் தலைவர் ஹெலன் கிளார்க் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.