2013-09-09 16:29:41

பாகிஸ்தானில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆசியா பீபிக்கு ஆதரவாக பிரிட்டன் மனித உரிமை குழு


செப்.09,2013. தேவநிந்தனை சட்டத்தின் கீழ் பொய்யானக் குற்றச்சாட்டுடன் பாகிஸ்தானில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆசியா பீபி என்ற கிறிஸ்தவ பெண்ணின் விடுதலைக்காக பிரிட்டனின் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.
குடிநீர் பிரச்னை தொடர்பாக எழுந்த வாக்குவாதத்தின் இறுதியில், இறைவாக்கினர் முகமதுவை பழித்துப் பேசினார் என்ற குற்றச்சாட்டின்பேரில் 2009ம் ஆண்டு கைதுச்செய்யப்பட்ட ஆசியா பீபி, ஐந்து குழந்தைகளின் தாயாவார்.
உலக சிறுபான்மை மக்களின் கூட்டமைப்பு என்ற குழு, ஆசியா பீபியின் விடுதலைக்காக உழைத்து வருவதுடன், அவருக்கு ஆதரவாக 5 இலட்சம் கையெழுத்துக்களையும் திரட்டத் திட்டமிட்டுள்ளது.
ஆசியா பீபி, தேவநிந்தனை சட்டத்தின் கீழ் பாகிஸ்தானில் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள முதல் பெண்மணியாவார்.

ஆதாரம் : ANS








All the contents on this site are copyrighted ©.