2013-09-07 15:11:12

இலங்கையில் ஐ.நா. மனித உரிமை அவைத் தலைவரைச் சந்தித்த தமிழ் அருள்பணியாளர் காவல்துறையால் நச்சரிப்பு


செப்.,07,2013. இலங்கை அரசை விமர்சனம் செய்பவர்களின் பேச்சு சுதந்திரமும், வெளிப்படுத்தும் சுதந்திரமும் திட்டமிட்டு நசுக்கப்படுகின்றன என்று பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இலங்கைக்கு அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமை அவைத் தலைவர் நவநீதம்பிள்ளை அவர்களைச் சந்தித்த இயேசு சபை தமிழ் அருள்பணியாளர் Veerasan Yogeswaran அவர்களை, காவல்துறை பல மணிநேரங்கள் கேள்விகளால் நச்சரித்துள்ளது.
அருள்பணியாளர் Yogeswaran வாழும் இல்லத்துக்குச் சாதாரண ஆடையில் இரவில் சென்ற காவல்துறை, நவநீதம்பிள்ளையிடம் அவர் என்ன கூறினார் என்று பல மணிநேரங்கள் கேட்டு நச்சரித்ததாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
60 வயதாகும் இயேசு சபை அருள்பணியாளர் Yogeswaran கிழக்கு மாநிலத்தில் மனித உரிமைகளைப் பாதுகாத்து வளர்ப்பதற்காக மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.