2013-09-07 15:13:46

அமைதிக் கலாச்சாரத்தை தனிமனிதர் புரிந்துகொள்ள வேண்டியது முக்கியம், ஐ.நா. அதிகாரிகள்


செப்.,07,2013. அமைதிக் கலாச்சாரம் எல்லைகளைக் கடந்து புரிந்துகொள்ளப்படுவதற்கு அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அறநெறி மற்றும் அரசியல்ரீதியான கடமை உள்ளது என்று, அமைதிக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் ஐ.நா.பொது அவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அமைதிக் கலாச்சாரம் குறித்த ஐ.நா. செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி இவ்வெள்ளியன்று நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் பேசிய, ஐ.நா. உதவிப் பொதுச்செயலர் யான் எலியாசன், கடும் சவால்கள் நிறைந்துள்ள இன்றைய உலகில், வன்முறைகள் புறக்கணிக்கப்பட்டு உரையாடலை ஊக்குவிக்க வேண்டியது சமயத் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அனைவரின் கடமை என்பதை வலியுறுத்தினார்.
மில்லென்ய வளர்ச்சித்திட்ட இலக்குகளை செயல்படுத்துவதற்கான ஆயிரம் நாள் நடவடிக்கைகளை ஐ.நா. நிறைவேற்றியுள்ள இவ்வேளையில், கடும் ஏழ்மையிலும், ஒதுக்கப்பட்ட நிலையிலும் வாழும் மக்களுக்கு அமைதிக் கலாச்சாரம் முக்கிய அர்த்தத்தைக் கொண்டுள்ளது என்றும் எலியாசன் தெரிவித்தார்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.