2013-09-04 16:25:01

செப். 05, 2013. கற்றனைத்தூறும்...... நினைவாற்றலுக்கு வேர்க்கடலை


வேர்க்கடலையில் உள்ள உயிர்வேதிப்பொருட்கள் நரம்பு செல்களை நன்கு செயல்படத் தூண்டும். இதனால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புள்ள ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்கும்.
படிக்கும் மாணவ, மாணவியர் வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடுவதால் ஞாபக மறதி ஏற்படாது என்கிறார்கள், உணவு ஆய்வாளர்கள்.
வேர்க்கடலையில் 30 விதமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் புரதம் அதிகம். நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் இருந்து இரத்தத்தில் சேரும் சர்க்கரையின் அளவை `கிளை செமிக் இன்டெக்ஸ்’ என்பார்கள். இது வேர்க்கடலையில் மிகவும் குறைவு என்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது. மேலும், வேர்க்கடலையின் மேல் உள்ள மெல்லிய தோலுக்கு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு. அதுமட்டுமின்றி, வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலின் சுரக்கும் ஹார்மோன்களை துரிதப்படுத்தும் சக்தி உள்ளது.
வேர்க்கடலையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான வைட்டமின் ஏ மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகம் உள்ளன. இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியம் வேர்க்கடலையில் குறைவு.
இதனால் வேர்க்கடை சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் அதிகரிக்காது. இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல் ஏற்படாது. வேர்க்கடலையை அவித்து அல்லது வறுத்து சாப்பிடவும். எண்ணையில் பொரித்து சாப்பிட வேண்டாம்.

ஆதாரம் : ஆழ்கடல் களஞ்சியம் இணையதளம்








All the contents on this site are copyrighted ©.