2013-09-04 16:34:52

சிரியாவில் அமெரிக்க ஐக்கிய நாடு இராணுவத் தாக்குதலை நடத்துவதற்கு எதிராக ஓட்டளிப்பதற்கு ஆயர்கள் வலியுறுத்தல்


செப்.04,2013. சிரியாவில் இராணுவத் தாக்குதலை நடத்துவதற்கு எதிராக அமெரிக்க ஐக்கிய நாட்டு காங்கிரஸ் அவை ஓட்டளிப்பதற்குக் கத்தோலிக்கர் வலியுறுத்துமாறு கேட்டுள்ளனர் அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், கத்தோலிக்கர் தங்களின் காங்கிரஸ் அவைப் பிரதிநிதிகளிடம், சிரியாவில் இராணுவத் தாக்குதலை நடத்துவதற்கு எதிராக ஓட்டளிப்பதற்கு வலியுறுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது.
மாறாக, அனைத்துலக சமுதாயத்தின் ஒத்துழைப்புடன் சிரியாவில் உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படுவதற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு தலைமை ஆதரவளிக்க கத்தோலிக்கர் வலியுறுத்துமாறும் கேட்டுள்ளனர் அமெரிக்க ஆயர்கள்.
வேதிய ஆயுதத் தாக்குதலை, திருப்பீடமும், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையும் கண்டித்துள்ள அதேவேளை, உரையாடல் ஒன்றே உயிர்களைக் காப்பாற்றி அமைதியைக் கொண்டுவர முடியும் எனவும் அமெரிக்க ஆயர்களின் அறிக்கை கூறுகின்றது.

ஆதாரம் : CWN







All the contents on this site are copyrighted ©.