2013-09-02 16:22:10

நவநீதம்பிள்ளையின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளவேண்டும் : ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்


செப்.,02,2013. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அவைத் தலைவர் நவநீதம்பிள்ளை இறுதியாக எழுப்பியுள்ள இலங்கைத் தொடர்பான கருத்துக்களை, ஐக்கிய நாடுகள் நிறுவனமும், காமன்வெல்த் அமைப்பும் கவனம் செலுத்த வேண்டும் என்று Amnesty International என்ற பன்னாட்டு மனித உரிமைகள் கழகம் அழைப்புவிடுத்துள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் அமைதியான முறையில் துன்பத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்று அவர் கூறிய கருத்து கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று என்று அக்கழகத்தின் ஆசிய-பசிபிக் உதவி பணியாளர் பொலி ட்ரஸ்கோட் தெரிவித்துள்ளார்.
போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளூர் விசாரணைகள் உரியமுறையில் நடத்தப்படவேண்டும், இல்லையேல் பன்னாட்டு அளவில் விசாரணைகள் தேவைப்படும் என்று அவர் கூறியிருப்பதை ஐக்கிய நாடுகள் நிறுவனமும், காமன்வெல்த் அமைப்பும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் ட்ரஸ்கோட் வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : TamilWin








All the contents on this site are copyrighted ©.