2013-08-27 16:01:42

சிறார் தொழில் முறைகளைக் களைவதற்கு ஐ.நா.வின் புதிய வழிகாட்டிகள்


ஆக.,27,2013. அடிமைத்தனம், சிறார் பாலியல் தொழில், போதைப்பொருள் வியாபாரம் உட்பட சிறார் தொழிலின் பல்வேறு அமைப்புமுறைகளை 2016ம் ஆண்டுக்குள் அகற்றும் நோக்கத்தில் நாடுகளுக்கு உதவும் புதிய வழிமுறைகளை வகுத்துள்ளது ஐ.நா.வின் அனைத்துலக தொழில் நிறுவனம்.
பல்வேறு சிறார் தொழில் அமைப்புமுறைகளுக்கு எதிரான நாடுகளின் நடவடிக்கைகளுக்கும், அனைத்துலக மற்றும் அரசு-சாரா நிறுவனங்களுக்கும் உதவும் வழிகாட்டிகளையும், பயிற்சிமுறைகளையும் தயாரித்துள்ளது ILO என்ற அனைத்துலக தொழில் நிறுவனம்.
பிரேசிலில் வருகிற அக்டோபர் 8 முதல் 10 வரை நடைபெறவிருக்கும் அனைத்துலக சிறார் தொழில் கருத்தரங்குக்கு முன்தயாரிப்பாக இவ்வழிகாட்டி முறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
ILO நிறுவனத்தின் கணிப்புப்படி உலகில் 11 கோடியே 50 இலட்சம் சிறார் பல கடினமான வேலைகளைச் செய்து வருகின்றனர்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.