2013-08-24 15:56:03

பங்களாதேஷின் நெருக்கடிநிலை நீங்குவதற்கு உரையாடலும் ஒத்துழைப்பும் அவசியம், பல்சமயத் தலைவர்கள்


ஆக.,24,2013. பங்களாதேஷின் தற்போதைய அரசியல் தொய்வுநிலை மற்றும் சமூக நெருக்கடிகளைக் களைவதற்கு, அந்நாட்டின் மதங்கள் மத்தியில் ஒன்றிப்பும், ஒத்துழைப்பும், உரையாடலும் அவசியம் என்று அந்நாட்டின் பல்சமயத் தலைவர்கள் கூறினர்.
பங்களாதேஷின் தற்போதைய நிலைமை குறித்து கலந்து பேசுவதற்கென டாக்காவில் இடம்பெற்ற பல்சமயக் கருத்தரங்கில் கலந்து கொண்ட தலைவர்கள் இவ்வாறு கேட்டுக்கொண்டனர்.
பங்களாதேஷின் இந்து, முஸ்லீம், புத்தம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட இக்கருத்தரங்கில் பேசிய கத்தோலிக்கப் பேராசிரியர் Mabel Gomes, சிறுபான்மை சமய மற்றும் இனத்தவர் நல்லிணக்கத்தோடு வாழக்கூடிய மிதவாத இஸ்லாமிய நாடாக பங்களாதேஷ் உருவாக முடியும் என்று கூறினார்.
இக்கருத்தரங்கில் நூறு பேர் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.