2013-08-17 15:59:20

அதிகம் காபி குடித்தால் ஆபத்து, ஆய்வாளர்கள் எச்சரிக்கை


ஆக.,17,2013. ஒரு நாளைக்கு, நான்கு கோப்பைக்கும் அதிகமாக காபி குடிப்பவர்களின் இதயம் பாதிக்கப்படுவதாக புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
ஒரு நாளைக்கு, நான்கு கோப்பை காபி குடிக்கும் பழக்கம் உடைய 40 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில் வெளியான பல தகவல்களை அமெரிக்க ஐக்கிய நாட்டு கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
காபி குடிக்கும் பழக்கம் அதிகரிப்பதால், உடல் சார்ந்த பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன என்றும், இவ்வாறு குடிப்பவர்களில் 50 விழுக்காட்டுக்கும் மேலானோரின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
காபி குடிக்கும் பழக்கத்தால் 2,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என்றும், 55 வயதிற்கு உட்பட்டவர்களே இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும், அதிகம் காபி குடிப்பவர்களின் இதயம் எளிதில் பலவீனம் அடைகின்றது என்றும், 17 ஆண்டுகள் தொடர்ந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
காபி குடிக்கும் பழக்கம் உடைய இளையோர், உடல் அளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்றும், ஒரு வாரத்திற்கு 28 கோப்பை காபி குடிப்பவர்களின் இதயம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என்றும், காபி குடிக்கும் பழக்கம் உடையவர்களில் 32 விழுக்காட்டினர் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆதாரம் : Independent







All the contents on this site are copyrighted ©.