2013-08-15 16:10:20

தமிழகத்தில் கொத்தடிமைத் தொழிலை ஒழிக்க புதிய செயல்திட்டம்


ஆக.15,2013. தமிழகத்தில் கொத்தடிமைகளாக உள்ள ஆயிரக்கணக்காவர்களை மீட்க மாநிலம் தழுவிய செயல்திட்டம் ஒன்றை யுனிசெஃப் உட்பட பல அமைப்புகள் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
மாநிலத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் இந்த நடவடிக்கை முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாக இதற்கு ஏற்பாடுச் செய்துள்ளோர் அறிவித்துள்ளனர்.
1976ம் ஆண்டு கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது இருந்ததைவிட, தற்போது பல்வேறு புதிய வடிவங்களில் கொத்தடிமை முறை வளர்ந்துள்ளதாக, இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள யுனிசெஃப் அதிகாரி வித்யாசாகர் தெரிவித்தார்.
பல மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு கட்டிடத் தொழில் மற்றும் பெரிய தொழிற்சாலைகளில் வேலைக்கு வருபவர்கள் கூட கொத்தடிமைகளாக வைக்கப்பட்டு வேலை வாங்கப்படுகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.