2013-08-14 11:59:28

ஆகஸ்ட் 15, 2013. கற்றனைத்தூறும்...... இந்திய சுதந்திரப் போராட்டம்


1498ல் வாஸ்கோடகாமாவின் இந்திய வருகை இடம்பெற்றது.
1600ல் இந்தியாவில் வார்த்தகம் செய்ய கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, வார்த்தகத்தோடு ஆதிக்கமும் வளர்ந்தது.
1757ல் பிரிட்டானிய ஆதிக்கத்திற்கு எதிராக இம்மண்ணில் முதல் பெரிய போர் நடந்தது. அதுவே பிளாசி போர். "சிப்பாய்க் கலகம்" என்றழைக்கப்படும், ஒன்றிணைந்த முதல் இந்திய சுதந்திரப் போர் இடம்பெற்றது, இதற்கும் நூறாண்டுகளுக்குப்பின்தான், அதாவது 1857ல். ஆனால், இதற்கிடையில் 1779ல் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதையும், 1806ன் வேலூர் கோட்டை புரட்சியையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.
இத்தகையச் சூழலில் 1877ம் ஆண்டு இந்தியாவின் பேரரசியாக விக்டோரியா பேரரசி அறிவிக்கப்பட்டார். 1885ல் இந்திய தேசிய காங்கிரஸ் உதயம் ஆனது.
1908ல் திலகரும், வ.உ.சியும் கைதுச் செய்யப்பட்டனர். 1911ல் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்றார் தமிழர் வாஞ்சிநாதன்.
தென் ஆப்ரிக்காவில் இருந்து அண்ணல் காந்தி 1915ல் இந்தியா திரும்பினார்.
1918ல் கொடுமைகள் நிறைந்த ரௌலட் சட்டம் இயற்றப்பட்டது. 1919ல் ஜாலியன் வாலாபாக் படுகொலை இடம்பெற்றது.
டில்லி பாராளுமன்றத்தில் பகத்சிங்கின் குண்டு வீச்சு, லாகூர் காங்கிரஸில் முழுசுதந்திரத்திற்கான தீர்மானம் ஆகியவை 1929ல் இடம்பெற்றன.
அதற்கடுத்த அடுத்த ஆண்டு 1930ல் உப்பு சத்தியாக்கிரகம், சட்டமறுப்பு இயக்கம், சிட்டகாங் புரட்சி போன்றவை இடம்பெற்றன. 1931ல் பகத்சிங் தூக்கிலிடப்பட்டார். 1942 ல் ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1943 ல் நேதாஜி இந்திய இராணுவம் அமைத்து, ‘சுதந்திர இந்தியா’ என அறிவித்தார்.
1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா சுதந்திரமடைந்தது.

ஆதாரம் : விக்கிபீடியா








All the contents on this site are copyrighted ©.