2013-08-09 16:29:40

மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் அப்பாவி குடிமக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன


ஆக.09,2013. மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் Seleka புரட்சிக்குழுவினர் அந்நாட்டின் அப்பாவி குடிமக்களுக்கு எதிராக நடத்திவரும் வன்முறைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக மறைபோதக அருள்பணியாளர் Aurelio Gazzera, Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
மேலும், இந்நாட்டில் கொலைகள், திட்டமிட்ட கைதுகள், சித்ரவதைகள், கட்டாயக் காணாமற்போதல், பெண்களுக்கெதிரான வன்முறை, பாதுகாப்பின்மை, சட்டம்-ஒழுங்கின்மை போன்றவை அதிகமாக இடம்பெறுவதாக ஐ.நா. வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Seleka புரட்சிக்குழுவினர், கடந்த மார்ச் மாதத்தில் அரசுத்தலைவர் François Bozizéஐ ஆட்சியிலிருந்து அகற்றிய பின்னர், அந்நாடு ஒரு சர்வாதிகாரப் போக்கில் சென்றுகொண்டிருப்பதாகவும் அவ்வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.