2013-08-08 17:00:32

நேர்காணல் – இயேசு சபை மீண்டும் அங்கீகரிக்கப்பட்டதன் 200ம் ஆண்டு


ஆக.08,2013 1540ம் ஆண்டு புனித இலெயோலா இஞ்ஞாசியாரால் ஆரம்பிக்கப்பட்ட இயேசு சபை, 1773ம் ஆண்டில் இரஷ்யா, ப்ரஷ்யா தவிர உலகின் பிற பகுதிகளில் மறைப்பணி செய்வதற்குத் தடை செய்யப்பட்டது. 41 ஆண்டுகளுக்குப் பின்னர் திருத்தந்தை 7ம் பத்திநாதர், இயேசு சபை மீண்டும் உலகெங்கும் மறைப்பணி செய்வதற்குத் அங்கீகரித்தார். அதன் 200ம் ஆண்டு விழா நிகழ்வுகள் ஆகஸ்ட் 7, இப்புதன்கிழமையன்று தொடங்கியுள்ளன. இந்த 200ம் ஆண்டின் சிறப்பு குறித்து வத்திக்கான் வானொலியில் இன்று பகிர்ந்து கொள்கிறார் அ.பணி.சேவியர் ஜெயராஜ் சே.ச. இவர் ஒரு வழக்கறிஞர் மற்றும் சமூகநலப் பணியாளர். இயேசு சபையின் கல்கத்தா மாநிலத்தைச் சேர்ந்த இவர், தற்போது உரோம் இயேசு சபை தலைமையகத்தில் இயேசு சபையினரின் சமூகப்பணித் துறையின் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.