2013-08-07 16:25:47

இழப்பிற்கும், மன உளைச்சலுக்கும் உள்ளானவர்களின் மனநல மருத்துவத்திற்கான புதிய வழிமுறைகள்


ஆக.07,2013. மனநல மருத்துவத்தில் சிறப்பு பயிற்சி பெறாத மருத்துவர்களும் மனநலம் பாதிக்கப்படிருப்போரின் தேவைகளைக் கேட்டறிந்து உதவமுடியும் என்று ஐ.நா.உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
உலக நலவாழ்வு (WHO) மற்றும் ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோருக்கான (UNHCR) நிறுவனங்கள், துயரமான நிகழ்ச்சிகளால் இழப்பிற்கும், மன உளைச்சலுக்கும் உள்ளானவர்களின் மனநல மருத்துவத்திற்கான புதிய வழிமுறைகளை அண்மையில் வெளியிட்டுள்ளன.
இவ்வழிமுறைகள் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய உலக நலவாழ்வு நிறுவனத்தின் மனநல அறிவியலாளர் Mark van Ommeren அவர்கள், ஏனைய மனநல வழிமுறைகளைக் காட்டிலும், இவ்வழிமுறைகள், பெரும்பாலும் உளவியல் அடிப்படையில் அமைந்துள்ளன என்று கூறியுள்ளார்.
முதல் நிலை மருத்துவ ஊழியர்கள் மனநலவழிகளில் தரக்கூடிய முதலுதவி, மன உளைச்சலை கையாளுவதற்குத் தேவையான தகவல்கள், மற்றும் வாழ்க்கையில் வரும் சூழல்களை நேர்மறையாக எதிர்கொள்ளும் முறைகள் ஆகியவற்றை இந்நிறுவனங்கள் வெளியிட்டுள்ள வழிமுறைகள் உள்ளடக்கியுள்ளது.
மனநல மருத்துவத்தில் சிறப்பு பயிற்சி பெறாத மருத்துவர்களும் மனநலம் பாதிக்கப்படிருப்போரின் தேவைகளைக் கேட்டறிதல், அவர்கள் துன்பத்திற்கு உள்ளாக்கப்படுவதைத் தடுத்தல், துயரமான நிகழ்வுகள் நடக்கும்பொழுது கண்மூடித்தனமாக முடிவெடுப்பதை தடுத்தல் போன்ற உளவியல் ரீதியான முதலுதவியை கொடுக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.