2013-08-05 16:58:18

நைஜீரியாவில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் போதிய சத்துணவின்மையால் துன்புறுகின்றனர்


ஆக.,05,2013. நைஜீரியாவின் வட மாநிலங்களில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் போதிய சத்துணவின்மையால் துன்புறுவதாகக் கத்தோலிக்கச் செய்தி நிறுவனமொன்று அறிவிக்கிறது.
போதிய உணவின்றி துன்பங்களை அனுபவிக்கும் 5 கோடியே 50 இலட்சம் மக்களுக்கு சேவையாற்ற, உலகின் 4 துயர்துடைப்பு நிறுவனங்களாலேயே முடிகிறது என்ற இக்கத்தோலிக்க நிறுவனம், குழந்தைகளின் உடல் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலையைத் தெரிவிக்கிறது.
போதிய சத்துணவின்மையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுள் 40 விழுக்காட்டினர் உதவிகளைப் பெறுவர் எனவும், மேலும் ஒன்பது இலட்சம் குழந்தைகள் இந்த ஆண்டில் போதிய சத்துணவின்மையால் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி எண்ணெய் வளமுடைய நைஜீரியாவின் இன்றைய கடும் நெருக்கடிகளுக்கு அதன் அரசியல் நிலைகளே காரணம் என்கிறார் ஐ.நா. அதிகாரி Choice Okoro

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.