2013-08-03 16:20:51

தலத்திருஅவை பேச்சாளர் : எகிப்தில் கிறிஸ்தவர்கள் பயம் நிறைந்த சூழலில் வாழ்ந்து வருகின்றனர்


ஆக.,03,2013. எகிப்தில் ஆட்சி கவிழ்க்கப்பட்ட அரசுத்தலைவர் Mohamed Morsiன் ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்திவருவதால் கிறிஸ்தவர்கள் பயம் நிறைந்த சூழலில் வாழ்ந்து வருகின்றனர் என்று அந்நாட்டுத் திருஅவை பேச்சாளர் அருள்பணி Rafic Greiche தெரிவித்தார்.
தலைநகர் கெய்ரோவிலும், பிற நகரங்களிலும் பல முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பாளர்கள் இருந்துகொண்டு மக்கள்மீதும், ஆலயங்கள்மீதும் பெட்ரோல் குண்டுகளை வீசி வருகின்றனர் என்று அருள்பணி Greiche மேலும் தெரிவித்தார்.
காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவர் திருத்தந்தை Tawadros, இராணுவம், குருக்கள் ஆகியோர் பற்றி அவதூறான வார்த்தைகளை ஆலயங்களில் எழுதி வைப்பதோடு, குருக்களைத் துரோகிகள் என அழைத்து வருவதாகவும் அருள்பணி Greiche வத்திக்கான் வானொலியில் கூறினார்.
எகிப்தில் தற்போது வன்முறைச் சூழல் இருப்பதாகவும், மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் எகிப்து திருஅவை பேச்சாளர் அருள்பணி Rafic Greiche கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.