2013-08-02 16:50:32

கற்றனைத்தூறும்...... உடல் எடையை குறைக்க…….


உடல் எடையை குறைக்க உணவை குறைக்கத் தேவையில்லை என்பது உணவியல் வல்லுநர்களின் ஆலோசனை.
நாம் தினமும் உண்ணும் உணவுகளில் வெள்ளை நிறப் பொருட்களைக் குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சீனி, உப்பு, சாதம், பால், தயிர் போன்ற வெள்ளை நிறப் பொருட்களை அளவைக் குறைத்து சேர்க்கவேண்டும்.
கொள்ளுப் பயறை அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.
வாரம் ஒரு முறையாவது ஓட்ஸ், பார்லி சேர்த்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் உடம்பில் உள்ள கொழுப்பையும், பார்லி உடம்பில் அதிகம் உள்ள நீரையும் குறைக்கும். ஆனால் பார்லியை, கருவுற்றிருக்கும் பெண்கள் உட்கொள்ள வேண்டாம்.
காலை உணவு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடையைக் குறைக்க உதவும்.
உடல் எடையைக் குறைப்பதில் ‘நடப்பது ‘ மிகச்சிறந்த பயிற்சி.
3 வேளையாக சாப்பிடாமல், 3 மணி நேர இடைவெளியில் 6 தடவையாக சாப்பிடுங்கள். அதனால் எப்போதும் சாப்பிடும் ஒரு வேளை உணவை (அதே அளவை) இரண்டாக பிரித்து 2 வேளையாக சாப்பிடுங்கள்.
டீ குடிப்பது உடலில் கொழுப்பைச் சேர விடாது. அதுவும் ‘க்ரீன் டீ’ மிகவும் நல்லது.
உடல் எடையை குறைப்பதில் நேர்மறை எண்ணங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ஆதாரம் : சித்தார்கோட்டை








All the contents on this site are copyrighted ©.