2013-07-27 16:52:52

நம்பிக்கை வாழ்வை தலைமுறை தலைமுறையாக வளர்ப்பதற்கு குடும்பம் ஒரு சிறந்த வழி - திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூலை,27,2013. ஜூலை 26ம் தேதி, வெள்ளிக்கிழமை, அன்னை மரியாவின் பெற்றோர்களான புனித சுவக்கீன், அன்னா ஆகியோரின் திருநாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ரியோ தெ ஜனெய்ரோ பேராயர் இல்லத்திலிருந்து, மதியம் வழங்கிய நண்பகல் மூவேளை செப உரை:

RealAudioMP3 ரியோ தெ ஜனெய்ரோ நகரில் பேராயர் Orani Tempesta அவர்களும், நீங்கள் அனைவரும் எனக்கு வழங்கிய வரவேற்புக்கு என் நன்றி. எனது பயணத்தின் வழியாக உங்கள் மத்தியில் கிறிஸ்துவின் மீதும், திருஅவையின் மீதும் அன்பு வளர்ந்தால், அது என்னை இன்னும் அதிக மகிழ்வுறச் செய்யும்.நாம் தினமும் செபிக்கும் இந்த மூவேளை செபம், நமது நம்பிக்கையின் ஓர் எளிய வெளிப்பாடு. கிறிஸ்து நம்மிடையே மனு உருவெடுத்தார் என்ற நமது மீட்பின் மறையுண்மையை ஒவ்வொரு நாளும் நமக்கு நினைவுறுத்தும் முக்கியமான செபம்.
கன்னி மரியாவின் பெற்றோர்களான, இயேசுவின் தாத்தா, பாட்டியான புனிதர்கள் சுவக்கீன், அன்னா ஆகியோரின் திருநாளை இன்று கொண்டாடுகிறோம். உலகின் பல நாடுகளில் இது தாத்தா, பாட்டி திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. சுவக்கீன், அன்னா இருவரும் உருவாக்கிய பக்தி மிகுந்த இல்லத்தில் அன்னை மரியா வளர்ந்ததால் அவர் இறை வார்த்தைக்குச் செவிசாய்க்கவும், இறை உள்ளத்தை நிறைவேற்றவும் கற்றுக் கொண்டார். இந்த அற்புத குணங்களால் அன்னை மரியா இறைவனின் தாயாகும் அழைப்பையும் ஏற்றார். நம்பிக்கை வாழ்வை தலைமுறை தலைமுறையாக வளர்ப்பதற்கு குடும்பம் ஒரு சிறந்த வழி.
குடும்ப வாழ்வைச் சிந்திக்கும்போது, அங்கு தாத்தா, பாட்டி ஆகியோர் எவ்வளவு முக்கியம் என்பதை உணரலாம். தலைமுறைகளுக்கு இடையே பரிமாறப்படும் எண்ணங்கள், அதிலும் சிறப்பாக, குடும்பங்களில் இத்தகைய பரிமாற்றம் உருவாவது மிகவும் முக்கியம். "ஒரு சமுதாயத்தின் எதிர்காலத்தை குழந்தைகளும், முதியோரும் இணைந்து எழுப்புகின்றனர்: வரலாற்றை முன்னெடுத்துச் செல்லும் குழந்தைகள், தங்கள் அனுபவத்தையும், ஞானத்தையும் அடுத்தத் தலைமுறைக்குத் தரும் முதியோர் என்ற இருவரும் ஒரு சமுதாயத்தின் எதிர்காலத்திற்குத் தேவை" என்ற கருத்தை Aparecida வில் கூடிய ஆயர்கள் கூறியுள்ளனர். தலைமுறைகளுக்கிடையே நிலவேண்டிய இந்த உறவு மிகவும் முக்கியமானது, போற்றி பாதுக்காக்கப்பட வேண்டியது.
பல நாடுகளிலிருந்தும் உலக இளையோர் நாளைக் கொண்டாட வந்திருக்கும் இளையோர், தங்கள் தாத்தா, பாட்டியை வாழ்த்துகின்றனர். வணங்குகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.