2013-07-27 16:10:22

கருக்கலைத்தலை ஆதரிக்கும் குழுவால் சிலே பேராலயம் சேதம்


ஜூலை,27,2013. கருக்கலைத்தலை ஆதரிக்கும் குழு ஒன்று சிலே நாட்டின் சந்தியாகோ தெ சிலேயின் பேராலயத்தில் நுழைந்துச் சேதப்படுத்தியதோடு, தேவநிந்தனை வாசகங்களையும் எழுதிவைத்துச் சென்றுள்ளது.
வியாழன் மாலை திருப்பலி இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது பேராலயத்தின் உள்ளே நுழைந்தகும்பல் ஒன்று, கருக்கலைத்தலுக்கு எதிரானதிருஅவையின் கொள்ககளை விமர்சித்ததோடு, அங்கிருந்தபொருட்களைச் சேதப்படுத்தியும் சென்றுள்ளது.
இச்செயல் குறித்து தன் கவலையை வெளியிட்டசந்தியாகோ தெ சிலே உயர்மறைமாவட்டதுணை ஆயர் Pedro Ossandón Buljevic, பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராகஇருக்கும் தலத்திருஅவையை இந்தபோராட்டக்காரகள் எப்போதும் அணுகலாம் என்றார்.
கருக்கலைத்தலுக்கு ஆதரவாக கூட்டங்களை நடத்துவது அவர்களின் விருப்பம் என்ற ஆயர், ஆனால், சட்டம், மக்களாட்சி மற்றும் மக்களின் மாண்பு ஆகியவைகளுக்கு மதிப்பளிப்பதாக எந்த ஒரு போராட்டமும் இருக்க வேண்டும் என்றார்.
85 விழுக்காட்டு மக்களை கிறிஸ்தவர்களாகக் கொண்டுள்ளசிலே நாட்டில் கருக்கலைத்தல் சட்டரீதியாகதடைச்செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.