2013-07-25 15:53:03

சிரியாவின் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள 24 இலட்சம் மக்களில் பாதிக்கும் அதிகமானோர் குழந்தைகள் - UNICEFன் இணை இயக்குனர்


ஜூலை,25,2013. சிரியா நாட்டின் Aleppo நகரில் நிலவும் சூழல் மனிதாபிமானத்தைக் கேள்விக்குரியதாக்கும் நிலை என்று ஐ.நா.வின் குழந்தைகள் அவசர நிதியுதவி அமைப்பான UNICEFன் இணை இயக்குனர் Yoka Brandt அவர்கள் கூறினார்.
கடந்த வாரம் இரு நாட்கள் Damascus சென்று திரும்பியுள்ள UNICEF மற்றும் செஞ்சிலுவை அமைப்பின் பிரதி நிதிகள் குழுவில் பங்கேற்ற Brandt அவர்கள், அங்கு குழந்தைகளின் நிலை குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்.
குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகள், உணவுப் பொருட்கள், ஆகியவற்றை 30,000க்கும் அதிகமானவர்களுக்கு வழங்கி திரும்பியுள்ள இக்குழுவினரின் சார்பில் செய்தியாளர்களிடம் பேசிய இணை இயக்குனர் Brandt அவர்கள், சிரியாவின் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள 24 இலட்சம் மக்களில் பாதிக்கும் அதிகமானோர் குழந்தைகள் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
உணவு, நீர், உறைவிடம் என்ற அனைத்துத் தேவைகளிலும் மிகக் கொடுமையானச் சூழலைச் சந்திக்கும் இக்குழந்தைகளுக்கு இன்னும் பெருமளவில் உதவிகள் தேவை என்றும், குறிப்பாக, அவர்களின் உடல் நலன், கல்வி ஆகிய தேவைகள் மிகப் பெரியன என்றும் சுட்டிக்காட்டினார் UNICEFன் இணை இயக்குனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / UN








All the contents on this site are copyrighted ©.