2013-07-25 16:18:10

கற்றனைத்தூறும்... Apan முத்ரா


மனித உடல் பஞ்சபூதங்களால் அமைக்கப்பட்டுள்ளது. நெருப்பு, கட்டை விரலையும், காற்று, ஆள்காட்டி விரலையும், வாயு நடுவிரலையும், பூமி, மோதிர விரலையும், தண்ணீர், சுண்டு விரலையும் குறிக்கின்றன. இந்தப் பஞ்சபூதங்களும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் மனித உடலில் உள்ளன. இவற்றில் ஒன்று சமநிலையில் இல்லாவிட்டால் உடல்நலம் பாதிக்கப்படுகின்றது. கைவிரல்களைப் பல நிலைகளில் வைக்கும் முத்ராக்கள் மூலம் மனிதரின் உடலிலும் மனத்திலும் நல்மாற்றங்களைக் கொண்டுவர முடியும் எனவும், உணர்வுரீதியாகவும், உடல்ரீதியாகவும் உடலைச் சமநிலையில் வைத்துக்கொள்ள முடியும் எனவும் தொன்மைகால ஆய்வுகள் கூறுகின்றன. இப்பிரபஞ்ச சக்தியைப் பெறுவதற்குச் செபங்களிலும் முத்ராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. கட்டைவிரலின் நுனி, நடுவிரலையும் மோதிரவிரலையும் தொடுமாறு வைப்பது Apan Mudra முத்ராவாகும். இது சக்தி முத்ரா எனவும் அழைக்கப்படுகின்றது. Apan Mudra கல்லீரல் மற்றும் பித்தப்பையோடு தொடர்புடையது. இம்முத்ரா, மலச்சிக்கல், மூலநோய், சிறுநீரகப் பிரச்சனைகள் ஆகியவை குணமாக உதவுகின்றது. இதயத்துக்கு வலிமை கொடுத்து உடலிலுள்ள அதிகப்படியான வெப்பத்தை அகற்றி உடலையும் மனதையும் சமநிலையில் வைக்கின்றது. அடிவயிற்றைச் சுத்தம் செய்து வலுப்படுத்துகின்றது. Apan Mudraவைத் தினமும் 45 நிமிடங்கள் செய்யலாம் அல்லது தினமும் 15 நிமிடங்களாக மூன்று தடவைகள் செய்யலாம். ஆனால், நடக்கும்போதும் சாப்பிடும்போதும் இதனைச் செய்யக் கூடாது.

ஆதாரம் : healinglaya.com







All the contents on this site are copyrighted ©.