2013-07-23 16:01:20

கென்யாவில் 6 இலட்சம் பேருக்கு சூரிய சக்தி மின்சாரம் வழங்கும் கத்தோலிக்க உதவி நிறுவனம்


ஜூலை,23,2013. கென்யாவின் 6 இலட்சம் மக்களுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் ஒன்றை தீட்டி செயல்படுத்தி வருகின்றது இங்கிலாந்தைச் சேர்ந்த கத்தோலிக்க உதவி நிறுவனமான CAFOD.
கென்யாவில் ஏழ்மையால் பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகளின் பள்ளிகள் மற்றும் நல மையங்களுக்கு உதவ உள்ள இத்திட்டத்திற்கென ஏற்கனவே 5 இலட்சம் இங்கிலாந்து பவுண்டுகளை ஒதுக்கியுள்ளது இக்கத்தோலிக்க உதவி அமைப்பு.
CAFODன் இத்திட்டத்திற்கென 15 இலட்சம் பவுண்டுகளை உதவியாக வழங்க உள்ளதாக ஐரோப்பிய ஐக்கிய அவையும் அறிவித்துள்ளது.
கென்யாவிலுள்ள நிறுவனம் ஒன்றின் மூலமே இதனை செயல்படுத்த உள்ள CAFOD, இத்திட்டத்தின் மூலம், நான்கு ஆண்டுகளில் 138 பள்ளிகள், நலமையங்கள் மற்றும் 69 சமூக அமைப்புகள் வழியாக, 6 இலட்சத்து 40 ஆயிரம் பேர் பலன் பெறுவர் எனவும் அறிவித்துள்ளது.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.