2013-07-22 15:28:51

ஒரு பெண்ணின் சுயநிர்ணய உரிமையை மதிப்பதற்கு, ஒரு குழந்தையின் வாழ்வதற்கான உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டுமா?


ஜூலை,22,2013. கருக்கலைப்பைத் தடைச்செய்யும் கொரியச் சட்டங்கள் குறித்து கவலைகொள்ளாமல் கருக்கலைப்பை மறைமுகமாக ஆதரிக்கும் அந்நாட்டு நீதித்துறையைக் குற்றஞ்சாட்டியுள்ளது கொரிய தலத்திருஅவை.
400க்கும் மேற்பட்டசட்டவிரோதகருக்கலைப்புக்களை மேற்கொண்டநான்கு பேருக்கு, உரியதண்டனை வழங்கத் தவறியுள்ளஅந்நாட்டின் Daejeon நீதிமன்றதீர்ப்பு குறித்து கவலையை வெளியிட்டகொரியஆயர் பேரவையின் வாழ்வுக்கு ஆதரவானஆணைக்குழுவின் தலைவர் ஆயர் Linus Lee Seong-hyo, குற்றத்தின் தீவிரத்தை உணர்த்துவதாகதீர்ப்பு இல்லை என்றார்.
தாயின் உயிருக்கு ஆபத்து என்பது உட்பட, குறிப்பிட்ட சில காரணங்களுக்காக மட்டுமே கருக்கலைப்பை அனுமதிக்கும் கொரியாவில், தாயின் வயிற்றில் கரு உருவாகிய 24 வாரங்களூக்குப்பின் கருவைக் கலைத்தல் முற்றிலுமாகத் தடைச் செய்யப்பட்டுள்ளபோதிலும், கருக்கலைப்புகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்றார் ஆயர்.
கருக்கலைப்பைத் தடைச்செய்யும் சட்டம் இருக்கிறபோதிலும், சுயமாக முடிவெடுப்பதற்குரிய பெண்களின் உரிமையைக் குறைத்து மதிப்பிட முடியாது என Daejeon நீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியிருப்பது, சட்டத்தின் வலிமையைக் குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது என மேலும் கூறினார் ஆயர் Linus.
ஒரு பெண்ணின் சுயநிர்ணய உரிமையை மதிப்பதற்கு, ஒரு குழந்தையின் வாழ்வதற்கான உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது கொரிய தலத்திருஅவை.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.