2013-07-20 15:28:31

திருத்தந்தை பிரான்சிஸ் : அன்பு இளையோரே, உங்கள் பயணத்தில் ஆண்டவர் உடன் இருப்பாராக


ஜூலை,20,2013. அன்பு இளையோர் நண்பர்களே, உங்களில் பலர் இன்னும் ரியோவுக்குப் பயணம் செய்துகொண்டிருப்பீர்கள் என்பதை நான் அறிவேன். உங்கள் பயணத்தில் ஆண்டவர் உங்களுடன் இருப்பாராக என்று திருத்தந்தை பிரான்சிஸ் இச்சனிக்கிழமையன்று Twitter செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
ஆங்கிலம், பிரெஞ்ச், இத்தாலியம், அரேபியம், இலத்தீன் ஆகிய மொழிகள் உட்பட ஒன்பது மொழிகளில் இந்த Twitter செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் இடம்பெறும் 28வது உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக ஜூலை 22, வருகிற திங்களன்று தனது முதல் வெளிநாட்டுத் திருப்பயணத்தைத் தொடங்கவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலகின் 71 விழுக்காட்டு இளையோர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பதாக G. Toniolo இளையோர் நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.