2013-07-18 16:21:42

பிரித்தானிய அரசின் ஓரினத் திருமண நடவடிக்கை அந்நாட்டுச் சமுதாயத்தின்மீது நீடித்த பாதிப்புக்களை உருவாக்கும், ஆயர் பேரவை


ஜூலை,18,2013. ஓரினத் திருமணத்தை ஆதரித்து பிரித்தானிய பாராளுமன்றமும், எலிசபெத் அரசியும் வழங்கியுள்ள ஒப்புதல், பிரித்தானிய சமுதாயத்தின் மீது நீடித்த பாதிப்புக்களை உருவாக்கும் என்று இங்கிலாந்து, வேல்ஸ் ஆயர் பேரவை வருத்தம் தெரிவித்துள்ளது.
ஜூலை 17, இப்புதனன்று எலிசபெத் அரசியால் கையெழுத்திடப்பட்ட இந்தச் சட்டம், பாராளுமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டதும், விவாதிக்கப்பட்டதும் தகுந்த முறையில் அமையவில்லை என்று ஆயர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மனித சமுதாயத்தின் அடிப்படை நியதிகளான திருமணம், குடும்பம் ஆகிய அமைப்புக்களை கேள்விக்குறியாக்கியுள்ள இந்தச் சட்டம், கத்தோலிக்கத் திருஅவையின் படிப்பினைகளுக்கு முற்றிலும் முரணானது என்பதையும் ஆயர்கள் தங்கள் அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஓரினத் திருமணங்களை நடத்திவைக்க மறுக்கும் பங்குத்தளங்கள், கோவில்கள் ஆகிய நிறுவனங்களுக்கு இச்சட்டத்தில் தகுந்த பாதுகாப்பும் தரப்படவில்லை என்பதை ஆயர்கள் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.