2013-07-15 16:00:32

இலங்கையில் 90 நிமிடங்களுக்கு பெண் ஒருவர் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்


ஜூலை,15,2013. இலங்கையில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் கொடுமைக்கு உள்ளாவதாக பெண்கள் உரிமை அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த பெண்கள் உரிமை அமைப்பின் இணை தலைவர் சரோஜா சாவித்ரி பால்ராஜ், இந்த பாலியல் அத்துமீறல் சம்பவங்களுக்குப் பின்னால் அரசியல்வாதிகள் இருப்பதாகவும் கூறினார்.
நாட்டில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன என்பதற்கு, ஆசிரியை ஒருவர் அரசியல்வாதி ஒருவரால் முழங்காலில் நிற்கவைக்கப்பட்ட சம்பவம் ஓர் உதாரணமாக இருக்கிறது எனவும் கூறிய இணை தலைவர் பால்ராஜ், 2011ம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட குடும்ப வன்முறைகளுடன் ஒப்பிடுகையில், 2013ம் ஆண்டில் அது 80 விழுக்காடாக உயர்வடைந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
போக்குவரத்து வாகனங்களில் பெண்கள் அவமதிக்கப்படுகின்ற சம்பவங்கள் 95 விழுக்காடாக அதிகரித்துள்ளன எனவும் கூறினார் அவர்.

ஆதாரம் : TamilWin








All the contents on this site are copyrighted ©.