2013-07-13 16:16:25

மலேசியக் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் புதிய சவால்கள்


ஜூலை,13,2013. மலேசியாவின் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் சமய சுதந்திரம் தொடர்பான சவால்களை அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கி வருகின்றனர் என்று Fides செய்தி நிறுவனம் கூறுகிறது.
சிறாரை மதம் மாற்றுதல், தனியார் பள்ளிகளில் இசுலாமியக் கல்வி, கிறிஸ்தவ வெளியீடுகளில் ”அல்லா” என்ற பெயரைப் பயன்படுத்துதல் ஆகிய சமய சுதந்திரம் தொடர்பான சவால்களை அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கி வருகின்றனர் என்று Fides செய்தி நிறுவனம் மேலும் கூறுகிறது.
மலேசிய அனைத்துக் கிறிஸ்தவ சபைகளையும் உள்ளடக்கிய, மலேசிய கிறிஸ்தவ கூட்டமைப்பின் செயலர் Tan Kong Beng, Fides செய்தி நிறுவனத்திடம் இப்புதிய சவால்கள் குறித்துப் பேசியபோது, இப்பிரச்சனைகளைக் களைவதற்குத் தாங்கள் எப்போதும் அரசியல் அமைப்பையே மேற்கோளாகக் காட்டி வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், மலேசியாவின் அரசியல் அமைப்பில் அனைத்துக் குடிமக்களுக்கும் சமய சுதந்திரத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்பதையும், கடவுளுக்கு ”அல்லா” என்ற பெயரைப் பயன்படுத்துவது கிறிஸ்தவர்களின் உரிமை என்பதையும் Beng சுட்டிக்காட்டினார்.
மலேசியாவின் ஏறக்குறைய 2 கோடியே 70 இலட்சம் மக்களில் 28 இலட்சம் பேர் கிறிஸ்தவர்கள்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.