2013-07-11 16:00:59

Vanity Fair இதழ் : திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் '2013ம் ஆண்டின் மனிதர்'


ஜூலை,11,2013. இத்தாலியில் வெளியாகும் Vanity Fair என்ற வார இதழ், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை 'இவ்வாண்டுக்கான மனிதர்' என்று அறிவித்துள்ளது. ஜூலை 10ம் தேதி இப்புதனன்று வெளியிடப்பட்ட இந்த இதழில் 'துணிவுள்ள திருத்தந்தை பிரான்சிஸ்' என்ற அட்டைப்படம் இடம்பெற்றுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப்பணியில் முதல் 100 நாட்கள் பணியாற்றியதை அடிப்படையாகக் கொண்டு, இவ்விதழில் பலரது கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் 100 நாட்கள் பணிகள், அவரை ஓர் உலகத் தலைவராக வெளிப்படுத்தியுள்ளன என்றும், அவர் துவங்கி வைத்த புரட்சி இன்னும் தொடர்கிறது என்றும் இத்தாலிய வார இதழ் Vanity Fair குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உருவச் சிலை ஒன்று Buenos Aires பேராலய வளாகத்தில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டதை அறிந்தத் திருத்தந்தை, தொலைபேசி மூலம் அந்த உருவச் சிலையை உடனடியாக அப்புறப்படுத்துமாறு வேண்டிக்கொண்டதை பேராலய நிர்வாகிகள் நிறைவேற்றிய்ள்ளனர் என்று ஆர்ஜென்டீனா ஊடகங்கள் கூறியுள்ளன.

ஆதாரம் : Huff Post / MailOnline








All the contents on this site are copyrighted ©.