2013-07-04 16:18:34

அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவரமுயலும் Congo அரசின் திட்டங்களுக்கு தலத்திருஅவை எதிர்ப்பு


ஜூலை,04,2013. மக்களாட்சிக்கு ஊறுவிளைவிக்கும் நோக்கில் அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவரமுயலும் Congo அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் எனகத்தோலிக்கர்களை விண்ணப்பித்துள்ளது தலத்திருஅவை.
அரசின் பிரதிநிதித்துவஇயல்பு, அரசுத்தலைவரின் பதவிக்காலம், நீதித்துறையின் சுதந்திரம், பலகட்சி அமைப்புமுறை போன்றவைகளில் மாற்றங்களைக் கொணரமுயலும் தற்போதையஅரசின் முயற்சி குறித்து கண்டனத்தை வெளியிட்டுள்ளகாங்கோ ஆயர்கள், இவை குறித்தஅரசியலமைப்பு விதிகளை மாற்றமுயல்வது, நாட்டின் நிலையானதன்மைக்கு ஊறுவிளைவிப்பதாகஇருக்கும் எனவும் கூறியுள்ளனர்.
கிராமப்புறங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை எனக் கூறும் ஆயர்கள், காரித்தாஸ் அமைப்பின் மூலம் இக்குறையை நிவர்த்தி செய்வதில் அரசுக்கு உதவத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மக்களின் ஏழ்மைநிலையை அகற்றுவதற்கு உழைக்கவேண்டிய அரசியல் தலைவர்களின் கடமையையும் வலியுறுத்தியுள்ளனர் காங்கோ ஆயர்கள்.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.