2013-07-03 15:14:16

கர்தினால் Tagle : கத்தோலிக்கப் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் இயேசுவை அறிவிக்க வேண்டும்


ஜூலை,03,2013. கத்தோலிக்கப் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் தங்களது விசுவாசத்தை வெளிப்படையாக அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார் மனிலா பேராயர் கர்தினால் Luis Antonio Tagle.
மனிலாவிலுள்ள கத்தோலிக்கப் பள்ளிகளுக்கென புனித Fernando de Dilao பங்கில் திருப்பலி நிகழ்த்திய கர்தினால் Tagle, விசுவாசிகள் கிறிஸ்துவோடு உறவில் வாழ்வதற்கு உதவுவதற்காகவே கத்தோலிக்கப் பள்ளிகள் இயங்குகின்றன என்றும் கூறினார்.
மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவம் பிலிப்பீன்ஸ் கடற்பகுதியில் மிகுந்த அளவில் செயல்படுவது தடை செய்யப்படுமாறு பிலிப்பீன்ஸ் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படைவீரர்களும், ஆயுதங்களும், இராணுவ வண்டிகளும், பாதுகாக்கப்பட்ட பிலிப்பீன்ஸ் கடற்பகுதிக்குச் சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் அழிவையும் முன்வைக்கின்றன என்று அம்மனுவில் குறை சொல்லப்பட்டுள்ளது.
கடந்த சனவரியில் அமெரிக்க கடற்படையினரால் குறைந்தது 2,346 சதுர மைல் பரப்பளவில் பவளப்பாறை அமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

ஆதாரம் : CBCP







All the contents on this site are copyrighted ©.