2013-07-02 14:50:06

ஜூலை 03, கற்றனைத் தூறும் – ஆஸ்திரேலிய வான்கோழி Brushturkey


ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Brushturkey அல்லது, Bushturkey என்றழைக்கப்படும் வான்கோழிகள், தாங்கள் இடும் முட்டைகளை ஒரே சீரான வெப்பநிலையில் பாதுக்காக்கின்றன. குழுக்களாக வாழும் இப்பறவைகள், 12 அடி விட்டமும், 3 அல்லது 4 அடி உயரமும் கொண்ட ஒரு பொதுவான கூட்டை இலைகளாலும், சருகுகளாலும் உருவாக்கி, அதில் முட்டையிடுகின்றன. ஒரே கூட்டில் 30 முதல் 50 முட்டைகள் இருக்கும் என்றும், இவை, 20 முதல் 30 செ.மீ. இடைவெளிவிட்டு, வட்டவடிவில் வைக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
பெண் கோழிகள் இடும் முட்டைகளை 30 முதல் 35 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் காப்பது ஆண் கோழிகளின் கடமை. முட்டைகள் வைக்கப்பட்டிருக்கும் கூட்டிற்குள் தங்கள் அலகை நுழைத்து, அங்குள்ள வெப்பநிலையை ஆண் கோழிகள் கணிக்கின்றன என்று சொல்லப்படுகிறது. கூட்டில் இலைகளை கூட்டியும், குறைத்தும் இந்த வெப்பநிலை பாதுக்காக்கப்படும். வெப்பநிலையைக் காப்பது மட்டுமல்லாமல், பாம்புகள், பல்லி வகைகள் ஆகியவை கூட்டிற்குள் புகுந்து, முட்டையைக் குடித்துவிடாமல் காப்பதும் ஆண் கோழிகளின் கடமை.

ஆதாரம் : Wikipedia








All the contents on this site are copyrighted ©.