2013-06-29 15:24:29

"மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் தற்போதைய நிலையை இதற்கு முன்னர் பார்த்ததே இல்லை", பேராயர் Nzapalainga


ஜூன்,29,2013. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் செலேக்கா புரட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ள பெரும் அழிவுகளால் அந்நாடு தற்போது இருக்கும் நிலையை இதற்கு முன்னர் பார்த்ததே இல்லை என்று அந்நாட்டின் Bangui பேராயர் Dieudonné Nzapalainga கூறினார்.
இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் பாலியம் பெற்ற 34 பேராயர்களில் ஒருவராகிய பேராயர் Nzapalainga, பொது மக்களின் சொத்துக்களையும், நாட்டின் ஆவணங்கள் உட்பட நிர்வாகம் சார்ந்த மற்ற ஏடுகளையும் செலேக்கா புரட்சியாளர்கள் பெருமளவில் சேதப்படுத்தியுள்ளனர் என்று Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
திருஅவையின் அமைப்பு வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், மறைமாவட்டங்கள் மற்றும் மறைப்பணித்தளங்களின் குறைந்தது நூறு வாகனங்கள் திருடப்பட்டுள்ளன என்றும் பேராயர் Nzapalainga தெரிவித்தார்.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் இந்நிலைமையைத் தான் திருத்தந்தையிடம் கூறவிருப்பதாகவும், நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கான தங்களது ஆவலை வெளிப்படுத்தவிருப்பதாகவும் கூறினார் பேராயர் Nzapalainga.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.