2013-06-29 15:29:20

உலகில் மரணதண்டனை நிறுத்தப்பட அழைப்பு, பான் கி மூன்


ஜூன்,29,2013. மரணதண்டனை நிறைவேற்றும் பழக்கத்தை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குக்குமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்.
மரணதண்டனையை ஒழிப்பது குறித்து நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் இடம்பெற்றுவரும் உயர்மட்ட அளவிலான கூட்டத்தில் இவ்வாறு வலியுறுத்திய பான் கி மூன், மரணதண்டனையை இன்னும் நிறைவேற்றிவரும் நாடுகள் இதனை ஒழிப்பது குறித்து உண்மையான விவாதங்கள் இடம்பெறுவதற்கு அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
நீதி வழங்குவதில் ஏற்படும் தவறான முடிவுகளுக்கு அப்பாவி மக்களின் உயிர்கள் பலியாவதைத் தடுப்பதற்கான கடமையை நாம் கொண்டுள்ளோம் என்று கூறிய பான் கி மூன், மரணதண்டனையை ஒழிப்பதே இதற்கு மிகவும் இன்றியமையாத வழி என்றும் கூறினார்.
மரணதண்டனையை நிறைவேற்றும் பழக்கத்தை நிறுத்துவதற்கு அழைப்புவிடுக்கும் நான்கு தீர்மானங்களை ஐ.நா.பொது அவை 2007ம் ஆண்டில் கொண்டுவந்த பின்னர், ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளுள் ஏறக்குறைய 150, இப்பழக்கத்தை இரத்து செய்துள்ளன அல்லது அதை நிறைவேற்றாமல் உள்ளன.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.