2013-06-27 16:37:42

Legionaries of Christ என்ற சபைக்கு, திருத்தந்தையின் பிரதிநிதியாக கர்தினால் Velasio De Paolis


ஜூன்,27,2013. Legionaries of Christ என்று அழைக்கப்படும் அருள் பணியாளர்கள் அமைப்பினை ஆய்வு செய்வதற்கு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2010ம் ஆண்டு, கர்தினால் Velasio De Paolis அவர்களை நியமித்தார்.
திருத்தந்தையின் பிரதிநிதியாகச் செயலாற்றும் கர்தினால் De Paolis அவர்களின் நியமனத்தை வருகிற ஆண்டு சனவரி மாதம் வரை நீட்டிக்கும் ஒரு மடலை இப்புதனன்று வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
2014ம் ஆண்டு சனவரியில் Legionaries of Christ அமைப்பினரின் பொது அவை நிகழும்போது, அக்கூட்டத்தில் இவ்வமைப்பினரின் தலைவர்கள் தெரிவு செய்யப்படுவர்; மற்றும், இவ்வமைப்பின் சட்டதிட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படும். இக்கூட்டத்திற்கு, திருத்தந்தையின் சார்பில் கர்தினால் De Paolis பங்கேற்கவேண்டும் என்று திருத்தந்தை பணித்துள்ளார்.
1941ம் ஆண்டு மெக்சிகோ நாட்டில் உருவான இவ்வமைப்பினரை, திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் 1965ம் ஆண்டு, ஒரு பாப்பிறை சபையாக ஏற்றுக்கொண்டார். தற்போது, 22 நாடுகளில் பரவியுள்ள இச்சபையில் 1800க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.