2013-06-24 16:52:49

திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவர்கள் யூதமத விரோதப் போக்கைக் கொண்டிருக்க முடியாது


ஜூன்,24,2013. கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் பொதுவான வரலாற்று ஆரம்பம் இருப்பதால் கிறிஸ்தவர்கள் யூதமத விரோதப் போக்கைக் கொண்டிருக்க முடியாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
பல்சமய ஆலோசனைகள் குறித்த அனைத்துலக யூதமதக்குழுவின் (IJCIC) முக்கியமான 30 பிரதிநிதிகளை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யூதமத நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்திப்பது இதுவே தனக்கு முதன்முறை என்று கூறினார்.
அர்ஜென்டினாவின் புவனோஸ் ஐரெஸ் பேராயராக இருந்தபோது யூதமதத் தலைவர்களுடன் தான் கொண்டிருந்த நட்புறவு பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதிகாரப்பூர்வமாக உரையாடலை வளர்ப்பதற்கு, இந்த நட்புறவு ஒருவகையில் அடித்தளமாக இருந்தது என்றும் தெரிவித்தார்.
இப்பிரதிநிதிகளும் இதே பாதையில் செல்வதற்கு முயற்சிக்குமாறும், இம்முயற்சி இளைய தலைமுறைகளை ஈடுபடுத்துவதற்கு உதவும் என்றும், மனித மாண்பை மதித்தல் மற்றும் அமைதிக்கு ஆதரவான நடவடிக்கைகளில் நமது ஒன்றிணைந்த சான்று வாழ்வு மனித சமுதாயத்துக்குத் தேவைப்படுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.