2013-06-24 17:13:35

சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம்


ஜூன்,24,2013. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடைபெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளிவிபர அறிக்கை தெரிவிக்கிறது.
2003ம் ஆண்டு நாட்டிலேயே மிக அதிக எண்ணிக்கையில் தமிழகத்தில் 51,000 சாலை விபத்துக்கள் நடைபெற்றுள்ள வேளை, அதற்குப்பின் 2012ல் அதிக அளவாக 68,000 விபத்துக்கள் நடந்துள்ளன.
தமிழகத்தில் ஒரு மணிநேரத்திற்கு 8 விபத்துக்கள் நடைபெறுவதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்தில் 16,175 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் கூறும் இந்த அறிக்கை, தமிழகத்தில் சாலை விபத்து மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக 44 பேர் உயிரிழக்கின்றனர் எனவும் தெரிவிக்கிறது.
சாலை விபத்துக்கள் அதிகமாக நடக்கும் இந்தியப் பெரு நகரங்களில் சென்னை (9663) முதலிடத்திலும், டில்லி (5865) 2வது இடத்திலும், பெங்களூரு (5508) 3வது இடத்திலும் உள்ளன.

ஆதாரம் : தினமலர்








All the contents on this site are copyrighted ©.