2013-06-22 16:21:18

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தந்தை பணியில் 100 நாள்கள்


ஜூன்,22,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தந்தை பணியில் 100 நாள்கள் என்ற ஆவணப்படம் இத்தாலியின் அரசு தொலைக்காட்சி Rai1ல் இஞ்ஞாயிறு காலை 9.45 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
கர்தினால் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ 2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் இடம்பெற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உரைகள் மற்றும்பிற நடவடிக்கைகள் இதில் இடம்பெறும்.
45 நிமிடங்கள் கொண்ட இந்த ஆவணப்படத்தில் சில பிரமுகர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பற்றிப் பேசுவதும் இடம்பெறும்.
வத்திக்கான் தொலைக்காட்சி மையமும் Rai1 தொலைக்காட்சியும் இணைந்து இதனைத் தயாரித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.