2013-06-21 16:25:50

முதுபெரும் தலைவர் Sako : சிரியாவின் பிரச்சனைக்கு அரசியலே ஒரே தீர்வு


ஜூன்,21,2013. சிரியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சண்டைக்கு அரசியல்ரீதியாக மட்டுமே தீர்வு காணப்பட வேண்டுமேயொழிய ஆயுத உதவிகளால் அல்ல என்று கல்தேய வழிபாட்டுமுறையின் பபிலோன் முதுபெரும் தலைவர் Louis Raphael Sako கூறினார்.
சிரியாவின் புரட்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கு சில மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்திருப்பது குறித்து Fides செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ள முதுபெரும் தலைவர் Sako, இத்தகைய ஆதரவு இறுதியில் மரணத்தையே கொண்டுவரும், ஏனெனில் இரத்தம் அதிக இரத்தத்துக்கும், பழிவாங்குதல் அதிகப் பழிவாங்குதலுக்கும் அழைப்புவிடுக்கும் என்று கூறியுள்ளார்.
சிரியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சண்டைக்குத் தீர்வு காண்பது குறித்த விவகாரத்தில் அனைத்துலகச் சமுதாயம் பிளவுண்டு நிற்கிறது என்றுரைத்துள்ள முதுபெரும் தலைவர் Sako, சிரியாவின் சண்டை மத்திய கிழக்குப் பகுதி முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையே, இன்று உலகில் 4 கோடியே 50 இலட்சத்துக்கு மேற்பட்ட அகதிகள் உள்ளனர் என்றும், இவ்வெண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் அதிகமாக இருக்கின்றது என்றும், சிரியாவிலிருந்து அதிகமான மக்கள் வெளியேறுவது இதற்கு முக்கிய காரணம் என்றும் ஐ.நா. அகதிகள் அவை இவ்வியாழனன்று கூறியுள்ளது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.