2013-06-18 17:16:38

ஈரானில் 6 கிறிஸ்தவர்களுக்கு சிறைத்தண்டனை


ஈரானில் அரசுத்தலைவர் தேர்தல் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளையில், 6 கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டு, கிறிஸ்தவத்தைப் பரப்பினார்கள் என்றகுற்றச்சாட்டின்பேரில் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளார்கள்.
Mohabat ஈரானிய கிறிஸ்தவ செய்தி நிறுவனம் வழங்கியுள்ள தகவலின்படி, ஒரு வீட்டினுள் கூடி மத வழிபாடு நடத்தியதாகவும், கிறிஸ்தவத்தைப் பரப்பியதாகவும், வெளிநாட்டு மறைபோதகர்களுடன் தொடர்புக் கொண்டிருந்ததாகவும், நாட்டிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்ததாகவும், தேசியப்பாதுகாப்பிற்கு ஊறுவிளைவித்ததாகவும் இந்த ஆறு கிறிஸ்தவர்கள் மீது குற்றச்சாட்டுப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொருவருக்கும் 3 ஆண்டு எட்டு மாத கால சிறைத்தண்டனை வழ்ங்கப்பட்டுள்ளதாகக் கூறும் இச்செய்தி நிறுவனம், அரசுத்தலவர் தேர்தலின்போது இக்கைதுகள் இடம்பெற்றமையால், அது வெளி உலகுக்குத் தெரியாமலேயேச் சென்றுவிட்டது எனவும் கூறுகிறது.
கடந்த ஒன்றரை மாதமாக சிறுபான்மை மதங்களுக்கு எதிராக, காவல்துறையின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும், Mohabat ஈரானிய கிறிஸ்தவ செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : ANS








All the contents on this site are copyrighted ©.