2013-06-17 17:12:41

வேப்பமரத்தில் அற்புதமான "வீரிய ஊக்கி': கால்நடை மருத்துவர் கண்டுபிடிப்பு


ஜூன்,17,2013. மருந்து, பெட்ரோல் உள்ளிட்டவைகளின் சக்தியை அதிகரிக்கும், "வீரிய ஊக்கி'யைக் கண்டுபிடித்துள்ளார் தேனியை சேர்ந்த, கால்நடை அரசு மருத்துவர் உமாகாந்தன்.
"நிம்பின்' என்ற வேதிப்பொருள் மூலம், "ஆன்டிபயாடிக்' தன்மையை, வேப்பமரம் அதிகரிக்கச் செய்து கொள்கிறது என்பதை, கடந்த எட்டு ஆண்டு ஆய்வில் கண்டுபிடித்து, "நிம்பின்' என்ற இந்த ‘வீரிய ஊக்கி’யை, குறைந்த அளவு மருந்துடன் சேர்த்து பயன்படுத்தினால், அதிக வீரியம் கிடைக்கும் என அறிய வந்துள்ளார் மருத்துவர் உமாகாந்தன்.
இதை, பெட்ரோல், டீசலில் குறிப்பிட்ட அளவு சேர்த்தால், எரிபொருள் சிக்கனம் கிடைக்கும்; மாசு உண்டாக்கும் புகை அளவை குறைக்கலாம் எனவும், மண்ணெண்ணெய், நல்லெண்ணெய், பசும்பால், நெய்யில் சேர்த்து, ஆராய்ச்சி செய்யப்பட்டதில், பயனுள்ள முடிவுகள் கிடைத்துள்ளன எனவும் கூறும் கால்நடை அரசு மருத்துவர் உமாகாந்தன், விவசாயம் மற்றும் சிமென்ட், ரப்பருடன், சரியான விகித்தில் பயன்படுத்தினால், வீரியம் அதிகரிக்கும், செலவு குறையும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : Dinamalar








All the contents on this site are copyrighted ©.