2013-06-17 17:16:22

திருத்தந்தை, வெனெசுவேலா அரசுத்தலைவர் சந்திப்பு


ஜூன்,15,2013. வெனெசுவேலா நாட்டு அரசுத்தலைவர் Nicolás Maduro, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்தார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீடத்தின் நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் வெனெசுவேலா அரசுத்தலைவர் Nicolás Maduro.
வெனெசுவேலாவின் அரசுத்தலைவர் Hugo Chávezவின் அண்மை இறப்புக்குப் பின்னர் அந்நாட்டின் சமூக மற்றும் அரசியல் நிலைமை, வறுமை ஒழிப்பு, குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் வியாபார ஒழிப்பு போன்ற தற்போதைய சில விவகாரங்கள் ஆகியவை இச்சந்திப்பில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டதாக திருப்பீடப் பத்திரிகை அலுவலகம் தெரிவித்தது.
வெனெசுவேலாவின் கல்வி, நலவாழ்வு, பிறரன்புப் பணிகள் போன்றவைகளில் தலத்திருஅவை ஆற்றிவரும் சேவைகள் பற்றியும், அந்நாட்டின் வரலாற்றில் கத்தோலிக்கத் திருஅவையின் பங்கு பற்றியும் இச்சந்திப்பில் பேசப்பட்டதாக அவ்வலுவலகம் தெரிவித்தது.
மேலும், வெனெசுவேலா அரசுடன் தலத்திருஅவை தொடர்ந்து உரையாடல் நடத்தவேண்டியதன் அவசியமும் இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதாக அவ்வலுவலகம் தெரிவித்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.