2013-06-13 17:20:29

அடிப்படையான, நலமான உணவுக்காக உலகின் ஏழைகள் இன்னும் பொறுமையுடன் காத்திருக்கத் தேவையில்லை - வெனேசுவேலா ஆயர் Azuaje


ஜூன்,13,2013. அடிப்படையான, நலமான உணவு அனைத்து மக்களின் அடிப்படை உரிமை என்றும், உலகின் ஏழைகள் இன்னும் பொறுமையுடன் காத்திருக்கத் தேவையில்லை என்றும் வெனேசுவேலா நாட்டின் ஆயர் ஒருவர் கூறினார்.
ஜூன் 8 கடந்த சனிக்கிழமை முதல், ஜூன் 16, வருகிற ஞாயிறு முடிய வெனேசுவேலா நாட்டின் Caracas எனுமிடத்தில் நடைபெற்றுவரும் காரித்தாஸ் பிறரன்புப்பணி கூட்டத்தில் உரையாற்றிய ஆயர் Jose Luis Azuaje இவ்வாறு கூறினார்.
இலத்தீன் அமேரிக்கா, மற்றும் கரிபியன் நாடுகளில் உள்ள காரித்தாஸ் பணிகளின் ஒருங்கிணைப்பாளரான ஆயர் Azuaje தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் 20 நாடுகளிலிருந்து வந்துள்ள காரித்தாஸ் உறுப்பினர்கள் பங்கேற்று வருகின்றனர்.
இலத்தீன் அமேரிக்கா, மற்றும் கரிபியன் நாடுகளில் அதிகத் தேவையில் உள்ளவர்களை முதன்மைப்படுத்தி, அவர்களுக்கு மிக அவசரத் தேவையாக உள்ளவைகளை உடனடியாகத் தீர்க்கும் முயற்சியில் இந்த கூட்டம் ஈடுபட்டுள்ளது என்று Fides செய்திக்கு அனுப்பப்பட்டுள்ள ஒரு குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.