2013-06-12 16:13:40

ஒன்றிப்பை வளர்க்கும் முயற்சிகளில் குடும்பங்கள் ஈடுபட்டால்தான் மனித சமுதாயத்தில் நிலையான அமைதி உருவாகும் - மெக்சிகோ கர்தினால் Carrera


ஜூன்,12,2013. பகைமையை வளர்ப்பதற்குப் பதிலாக, ஒன்றிப்பை வளர்க்கும் முயற்சிகளில் குடும்பங்கள் ஈடுபட்டால்தான் மனித சமுதாயத்தில் நிலையான அமைதி உருவாகும் என்று மெக்சிகோ நாட்டு கர்தினால் Norbeto Carrera கூறினார்.
தனி மனிதர்கள் தங்களிடம் உள்ள ஆயுதங்களை தாங்களாகவே முன்வந்து அரசிடம் ஒப்படைக்கும் ஒரு முயற்சி மெக்சிகோ நகரின் பேராலயத்தில் இத்திங்களன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய மெக்சிகோ கர்தினால் Carrera, தங்கள் சொந்த முயற்சியால் ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் இந்த ஆயுத ஒப்படைப்பு, நாட்டில் வன்முறையை வெகுவாகவும், நீடித்த காலமும் குறைக்கும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டார்.
மெக்சிகோ அரசு மேற்கொண்ட இந்த முயற்சியில் ஆயுதங்களை ஒப்படைப்போருக்கு அவ்வாயுதங்களுக்கு ஈடான தொகை வழங்கப்பட்டது என்றும், இதுவரை 6000 ஆயுதங்களும், 49,000 சுற்று குண்டுகளும் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும் CNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.