2013-06-11 17:00:27

Cape Verde நாட்டிற்கும் திருப்பீடத்திற்கும் இடையே புதியஒப்பந்தம்


Cape Verde நாட்டிற்கும் திருப்பீடத்திற்கும் இடையே புதியஒப்பந்தம்

ஜூன்,11,2013. Cape Verde நாட்டில் ஆன்மீகப் பணிகள் தொடர்புடையவைகளில் தலத்திருஅவையின் அதிகாரத்தைக் குறிக்கும் ஒப்பந்தம், இத்திங்களன்று Cape Verde குடியரசின் அரசு மாளிகையில் கையெழுத்திடப்பட்டது.
பிரதமர் José Maria Neves முன்னிலையில் இவ்வொப்பந்தத்தில் திருப்பீடத்தின் சார்பில் வெளியுறவுதுறைச் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி, Cape Verdeயின் வெளியுறவு அமைச்சர் Jorge Alberto da Silva Borges ஆகியோர் கையெழுத்திட்டனர்.
கடந்த 37 ஆண்டுகளாக திருப்பீடத்திற்கும் Cape Verde நாட்டிற்கும் இடயே நிலவும் நல்லுறவுகளின் தொடர்ச்சியாக, தற்போது, பல்வேறு துறைகளில் குறிப்பாக, திருஅவைத் திருமணங்கள், வழிபாட்டுத் தலங்கள், கத்தோலிக்கக் கல்வி நிலையங்கள், பள்ளிகளில் மதக்கல்வி, திருஅவையின் பிறரன்புப் பணிகள், இராணுவத்தாரிடையே மறைப்பணி, மருத்துவ மனைகளில் ஆன்மீகப்பணி, போன்றவைகளில் திருஅவையின் அதிகாரம் குறித்து இவ்வொப்பந்தத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.
இருநாடுகளிடையே கையெழுத்திடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் இன்னும் 30 நாட்களில் அமுலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : SeDoc








All the contents on this site are copyrighted ©.