2013-06-07 16:38:57

ஜூன் 01, 2013. கற்றனைத்தூறும்...... GOOGLE(கூகுள்) உருவான கதை


இன்று கூகுள் என்றால் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள்.
லாரி பேஜ் என்பவரும் அவர் கல்லூரித் தோழர் செர்ஜி பன்னும் சேர்ந்து,
பிட்ஸா விநியோகம் செய்து சம்பாதித்த பணத்தில் மிச்சம் பிடித்து கணனி வாங்கித் தங்கள் கல்லூரி விடுதி அறையில் ஒரு சிறு நிறுவனத்தை ஆரம்பித்தார்கள். பிறகு ஒரு வீட்டு அறையை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் நிறுவனம் நடத்தினார்கள்.
கணிதத்தில் ஒன்று போட்டு நூறு பூஜ்யங்கள் போட்டால், அந்த மிகப்பெரிய எண்ணின் பெயர் கூகால் (googol). எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள். ஆனால் ஓர் எழுத்துப் பிழையுடன் GOOGLE என்ற பெயரே நிலைத்துவிட்டது.
இதை உருவாக்கி முடித்ததும் இந்த்த் தேடல் நுட்பத்தை Yahoo போன்ற பெரும் நிறுவனங்கள் எதற்க்காவது விற்கலாம் என முடிவெடுத்தனர் பேஜ்ஜூம், பன்னும். வாங்க யாரும் இல்லாததால் 1998-ல் Google நிறுவனம் பெரிய அளவில் உருவானது. ஆரம்பத்தில் பணம் ஒன்றும் அவ்வளவாய் சம்பாதிக்க இயலவில்லை. இன்று இந்நிறுவனத்தில் எட்டாயிரம் பேர் வேலை செய்கிறார்கள். கூகுளின் மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல்.
சாதாரணமாகக் கடையில் கிடைக்கும் கணனிகளை ஏராளமான எண்ணிக்கையில் வாங்கி அவற்றை ஒத்துழைக்க வைத்த மென்பொருள் (சாப்ட்வேர்) சாணக்கியத்தனம்தான் அவர்கள் செய்தது. கூகுள் பிறந்த புதிதில் சர்ச் எஞ்சின் எனப்படும் வலைத் தேடல் இயந்திரமாக மட்டும்தான் இருந்தது. இன்று, கூகுள் செய்தி, கூகுள் வரைபடம், இலவச நூலகம், மொழிபெயர்ப்பு, ஜி மெயில், இணைய சர்வரில் சேமிக்க இலவச இடம் என பல சேவைகள்.
இன்றைய நிலவரப்படி, அமெரிக்க உளவுத்துறையினர், மைக்ரோசாஃப்ட், யாஹு, கூகுள் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட 9 முன்னணி இணையதள நிறுவனங்களின் சர்வர்களுக்குள் நுழைந்து உளவுபார்ப்பதாக அமெரிக்காவின் ‘த வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையும், பிரிட்டனின் ‘த கார்டியன்’ பத்திரிகையும் தெரிவித்துள்ளன.








All the contents on this site are copyrighted ©.