2013-06-07 16:38:21

Mato Grasso என்ற இடத்தில் வாழும் பழங்குடியினருக்கு பிரேசில் நாட்டு ஆயர்கள் ஆதரவு


ஜூன்,07,2013. அநீதி இன்னும் அதிகமான வன்முறையைத் தூண்டுகிறது என்று பிரேசில் நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.
பிரேசில் நாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள Mato Grasso என்ற இடத்தில் வாழும் பழங்குடியினர், தங்களுக்குரிய பூர்வீக நிலங்களை அரசும் வர்த்தக உலகமும் தங்களிடமிருந்து பறிக்கும் முயற்சிகளை எதிர்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் தற்போது வேறு மூன்று மாநிலகளுக்கும் பரவியதால் எழுந்த வன்முறையில் ஒருவர் இறந்துள்ளார், மற்றும் பலர் காயமுற்றுள்ளனர். இந்தப் போராட்டத்தை அடக்க, பிரேசில் அரசு அப்பகுதிகளுக்கு இராணுவத்தை அனுப்பியுள்ளது.
இது குறித்து, இப்புதனன்று அறிக்கை வெளியிட்ட Mato Grasso பகுதி ஆயர்கள், பழங்குடியினரின் உரிமைகள் அவர்களது பிறப்புரிமைகள், அவற்றை, பிறரிடம் கெஞ்சிக் கேட்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளது வேதனை தருகிறது என்று கூறியுள்ளனர்.
Fides செய்திக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த அறிக்கையில், பிரேசில் அரசு, வன்முறை அடக்குமுறைகளைக் கைவிட்டு, பழங்குடி மக்களுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவேண்டும் என்று ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.